Thursday, January 27, 2011

யோகாவில் அழகு


யோகாவின் உதவியால் உடலை கட்டுக்குலையா மல் காப்பாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு தனது வி.ஐ.பி. கஸ்டமர்களைக் காட்டி `கண்டிப்பாக முடியும்’ என்று கூறுகிறார் இந்திய பிரபலங்களின் யோகா பயிற்சியாளர் பாயல் கித்வானி திவாரி. “2003-ம் ஆண்டில் நான் யோகாவைப் பற்றி அறிந்து கொண்டேன். யோகா பயிற்சியில் என்னுடைய உடல் மற்றும் மனதில் புத்துணர்ச்சியும் கட்டுக்கோப்பும் கிடைத்தது. இதனை பிறருக்கு பயனுள்ள வகையில் தற்போது பயிற்சியாக கொடுத்து வருகிறேன். நல்ல பலன் கிடைக்கிறது. எல்லோரும் என்னிடம் `யோகாவின் மூலம் உடல் அழகை மேம்படுத்த முடியுமா?’ என்று கேட்கிறார்கள்… கண்டிப்பாக முடியும்”.
தனது யோகா அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய குறிப்புகளை இங்கே பார்ப்போம்,
* யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.
* யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!
* நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.
* நீங்கள் எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி.
* யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.
* யோகா உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும்!

No comments:

Post a Comment