Saturday, June 30, 2012

உருளைக்கிழக்கு



மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாதுஉப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வழைப்பழத்தில் உள்ளதைப்போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது.

நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

பச்சை உருளைக்கிழங்கு

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.

வாத நோய் குணமாகும்!

இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்
தசை வீக்கம்
உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

உருளைக்கிழங்கு வைத்தியம்

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுவிடும்.

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

இயற்கை பிளீச்சிங்

இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

பாலுணர்வை தூண்டும்

இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். எனவே, வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.

MS WORD SHORTCUTS



CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+SHIFT+SPACEBAR: இடையே உடையாத இடைவெளியை உருவாக்க
CTRL+C: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திட
CTRL+X: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திட
CTRL+V: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிட
CTRL+ALT+V: சிறப்பான முறையில் டெக்ஸ்ட் ஒட்டிட
CTRL+SHIFT+< : எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+SHIFT+>: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+[: எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+]: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+HYPHEN: இடையே உடையாத ஹைபன் அமைக்க
CTRL+SPACEBAR : பாரா அல்லது கேரக்டர் பார்மட்டிங்கினை நீக்க
CTRL+SHIFT+V:பார்மட்டிங் மட்டும் ஒட்டிட
CTRL+Z: இறுதியாக மேற்கொண்ட செயலை நீக்கிட
CTRL+Y: இறுதியாக அழித்ததனை மீண்டும் கொண்டுவர
CTRL+SHIFT+G: சொல் எண்ணிச் சொல்லும் டயலாக் பாக்ஸைக் கொண்டு வர
CTRL+L: திரையின் இடது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+E: திரையின் நடுவாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+R: திரையின் வலது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+M: பாரா அல்லது தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை மார்ஜினில் அமைக்க
CTRL +1: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒரு வரியாக அமைக்க
CTRL +5: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒன்றரை வரியாக அமைக்க
CTRL +2: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் இரு வரிகளாக அமைக்க
F7: : ஸ்பெல்லிங் மற்றும் இலக்கண தவறுகளைச் செக் செய்து தர
SHIFT+F7: தெசாரஸ் என்னும் ஒரு சொல் போன்ற பொருள் தரும் பிற சொல் தரும் தெசாரஸ் பயன்பாட்டைப் பெற
CTRL+SPACE: ஆட்டோ கரெக்ட் பெறவும் மூடவும்

நாட்டு மருந்து பெயர்கள்

சுரசம் (Surasam), கஷாயம் (Kashayam) என்றெல்லாம் அறியப்படும் இந்த மூலிகை டிகாக்ஷனின் (herbal decoction) எப்படித் தயாரிப்பது? இதில் என்னென்ன வகைகள் உள்ளன?

ஒரு மூலிகையையோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மூலிகைகளை இணைத்தோ, 1:6 (ஒரு பங்கு மூலிகைக்கு ஆறு பங்கு தண்ணீர்) என்றளவு தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறு பங்கு தண்ணீர் இரண்டு பங்காகச் சுருங்கி வரும்போது வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் மூலிகையின் தன்மைக்கேற்ப நோயின் தீவிரம் குறைகிறது. மிக முக்கியமாக இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

சுரசம் / கஷாயம் தயாரிக்க பயன்படும் சில நாட்டு மருந்துகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஹிந்தியிலும் தொகுத்துள்ளேன்.


EnglishTransliterated HindiTransliterated TamilTamil
AconiteVachnagNabhiநாபி
AlmondBadamBadam Kottai, Badam Paruppuபாதாம் கொட்டை, பாதாம் பருப்பு
Aloe Vera, AloeKuar GandhalSotthukkathazhai, kumariசோத்துக் கத்தாழை, குமாரி
AlumPhitkariPadikaramபடிகாரம், சீனாக்காரம், படிக்காரம்
Amaranth Seeds, Amaranth, Pigweed, Amaranth leavesChaulli, Chowlii, Chauli, Chavleri Dana, Chauli, Chavleri, Chaulai, Chavlerr, Chowli, Chowlai, Ramdana, Rajgeera, Solai, Chaulli, Chowlii, Chavleri SagMulai Keeraiமுளைகீரை, முளைகீரை விதை
Anant MoolAnant MoolPeriya elamபெரிய ஏலம்
AndropagonKhusVettiver, Vilamichhamverவிலாமிச்சம் வேர், வெட்டிவேர்
Andrpagun muricatusSugandhKaratnvalகரத்னவல்
Aniseed, Sennel seed. FennelSaunf, Badiyan, Badi Saunf, SounfSombuசோம்பு
ApricotKhumani, Khoobani, Jardalu, qubani, JaldaruApricot, Badham Pazamஆப்ரீகாட், பாதாம் பழம்
Arrowroot, Arrow RootPaniphal, Tikora, ThavakirArrowroot, Aroti mavuஆரோரூட்
Asafoetida, Dikamalligum (or) DeekamallHing, Chimba / HeengPerungayamபெருங்காயம்
AsparagusShatwar, Sootmooli, Halyan, MusliKilavariகிலவரீ
Asparagus recemosusShathavariShathavariசதாவரி
BabrengValvadingValvilangam babuவால்விளங்கம் பாபு
Basil, Basil leavesTulsi, Barbar, Tusli Ke PatteTirunirrippachai, Tiviragandam or Tulasiதிருநீரிப்பச்சை, திவிரகந்தம், துளசி, துளசி இலை
Bay LeafTez Patta, Tej, Tej PattaBrinchi Ilai, Punnai Ilai, Ilavanga Patriபிரிஞ்சி இலை, புன்னை இலை, இலவங்க பத்திரி
BerberiasaristataDaroohaldiMara Manjalமர மஞ்சள்
Betel leaves, piperPaanVettrilaiவெற்றிலை
Bijour gollstoneGorochanGorochanamகோரோசனம்
Black Cumin Seeds, Black Caraway SeedsShajeer, Shahi Jeera, Shahjeera, Kala JeeraKarun Jeeragamகருஞ் ஜீரகம்
Black HelleboreKutkiKaduku rohiniகடுகு ரோகினி
Black PepperKali MirchMilaguமிளகு
Black RaisinsKalidhraksh, Kali DharakshKaruppu Thiratchai, Karupu Drakshaiகருப்பு திராட்சை, கருப்பு திராக்ஷை
Black Salt, Rock SaltKala NamakKaruppu Uppu, Indhuppuகருப்பு உப்பு, இந்துப்பு
Black stone flowerJeevantiKalpasiகல்பாசி
Brown Cardamom, Black CardamomElaichi (Moti), Ilaichi, Badi ElaichiYelakkai (periyadhu)ஏலக்காய் (பெரியது)
Brown Sugar, black molasses, black jaggeryKaali Gud, Kaali gurKarupattii, Panam-Karkanduகருப்பட்டி, பனம்-கற்கண்டு
Bushy gardeviaMainpalMadukkaraiமதுக்கரை
Carom Seeds, Thyme, Oregano, Thymol SeedAjwainOmamஓமம்
Cashew NutKajuMundhiri, Mundhiri Paruppu, Mundiriமுந்திரி , முந்திரி பருப்பு
Castor Sugar (powdered cane sugar or shakkar), Icing SugarPithi Shakkar, Pisi Cheeni, Pisi hui chiniChuckerai, Ceeni Mavooசுக்கரை, சீனி மாவு
Catechu, cachou, cutch, cashoo, Japan earth, White cutch, gambier, gambeer, gambirMalay, Katha, KaththaKaada kācu, kācukkaṭṭi, Katthakambuகாடாகாச்சு, காச்சுகட்டி, கத்தகாம்பு
Cedrus Deodara(Pine Sadipodar)DevadarDevadar Kattalதேவதாரு கட்டல்
ChestnutChota AkhrotChinna Akrootசின்ன அக்ரூட்
China RootChopchiniFarapghi, Parangichekkai-Parinkipatteபரங்கி, பரங்கி சக்கை, பரங்கி பட்டை
Chinnoti Redangaravallari, gunjadimaduramஅதிமதுரம் சிகப்பு
Chinnoti Whiteangaravallari, gunjadimaduramஅதிமதுரம் வெள்ளை
ChiretaChiraythaNilavembuநிலவேம்பு
Cinnamon, CassiaDalchini, Dal ChiniPattai, Ilavangappattaiபட்டை, இலவங்கப்பட்டை
Cinnamonum tamalaTejpataBrinchi Ilai, Punnai Ilai, Ilavanga Patriபிரிஞ்சி இலை, புன்னை இலை, இலவங்க பத்திரி
Citric AcidNimbu Ka Tejab, Nimboor Sat, Nimboo ka Sat, Nimboo satCitric Amilamசிட்ரிக் அமிலம்
Clero-deudronserratumBharegiBukkarathi keeralபுக்கரதி கீறல்
CloveLavang, LaungLavangam, Kirambu, Krambuஇலவங்கம், கிராம்பு
Coleus RootsPatharchurNannari Verநன்னாரி வேர்
Common cressHaloThukkamalankiதுக்கமளங்கி
CostusrootKoshtaGoshtamகோஷ்டம்
Cotton seeds, CottonseedDhanti, KapasParuththi vidhai, ilavu, ilavamபருத்தி விதை, இலவு, இலவம்
Country gooseberry, Shatterstone, Phyllanthus NiruriBhumiamla, Bhumi-Amla, Bhumi Amla, Boomi Aamla, Bhoomi AmlaKeela nelliகீழா நெல்லி
Creya arboriaKaffal, kumbhi, katabhiPaparavudamபாபரவுடம்
CubebsChanak balaValmilaguவால்மிளகு
Cucumber seedsKeerabeejDurboos vldhalதர்பூஸ் விதை
CurrantsKishmish, Kala DrakshKayndha Thiratchaiகாய்ந்த திராட்சை
Curry LeavesKari Patta, Curry patta, Meetha Neem Ka Patte, Kadi PattaKaruVEppilaiகருவேப்பிலை
Cyperusrotondous / Nut grass, coco grass, nutgrass, common nutsedge, purple nutsedgeNagaramotha, bara-nagar-motha, korehi-jhar, motha, mutha, nagarmotha, khal, motho, doongla, doongia, mothi, moth, motheekora, korai, korai kilangu, muthakasu, pathalamulam, muttakkacu, korai-k-kilanku, koraikkilanku, korai-kizanghu, tunga-gaddai, korai kizhangu, koraikkizhangu, tiratkorai, accam, araikkali, araikkalippul, avittam, ayali, ayil, ayirpul, campankorai 2, cankam 2, catatatikam, celakam, celam, celatam, celekam, cevakam 2, cevvetakam, erumainkkuppul, eruvai 2, eruvaippul, kaivarttam, kancukam 2, kankeyam, karkkoli 2, karkoli 3, karkoli@, karkolippul, karuvukatitam, karuvukatitappul, kerukam, kolavunavu, kontankilanku, koraippul, koraippurkilanku, korankilanku, korutan, kotakilanku, kotani, kotanikkilanku, kulamaccam, kunram 2, kupaiyatitam, kupaiyatitappul, kuruvintakan, kuruvintakkilanku, kutiraivavikam, kutiraivavikappul, masta, paiyam, panritonripputu, panritontuputu, panrittonri, panrittonti, panrittontipputu, perunkolikam, perunkolitam, talaikkorai, tattaikkoraikkilanku, tiraiyappul, tirkkakantam, tulam, tulam 2, tunkamuttu#, tunkamuttukkilanku, tunkumustu, muttati 2, nanal, netila, vicciral#, vicciram, viccirappul, visakkani, ural, vacanaippulkilanku, vacciracalakkilanku, vacciracalam, vacciracelatam, vaccirakentam, vacciratilatam, varakiகோர, கோரை, கோரை கிழங்கு, முதகசு, பதலமுலம், முட்டக்கசு, கோரைக் கிழங்கு, கோரைக்கிழங்கு, துங்க கட்டை,திரட்கோரை, அக்கம், அரைக்கலி, அறைக்களிப்புல், அவிட்டம், அயலி, அயில், ஆயிர்புல், கம்பன்கோரை, சங்கம், சடடடிகம், செலகம், செலம், செலதம், செலேகம், சேவகம், செவ்வேடகம், எருமைங்குப்புல், எருவை , எருவைப்புல், கைவரட்டம், கஞ்சுகம், காங்கேயம், கர்க்கோழி, கர்கோலி, கர்கொளிப்புல், கருவுகடிடம், கருவுகடிடப்புள், கேருகம், கொளவுணவு, கொண்டன்கிளங்கு, கோரைப்புல், கோரைப்பபுற்கிழங்கு, கொருடன், கொடகிழங்கு, கோடணி , கோடணிக்கிழங்கு , குலமச்சம், குன்றம், குப்பையாடிடம், குப்பையாடிடப்புல், குருவிண்டகன், kuruvintakkilanku, kutiraivavikam, kutiraivavikappul, masta, paiyam, panritonripputu, panritontuputu, panrittonri, panrittonti, panrittontipputu, perunkolikam, perunkolitam, talaikkorai, tattaikkoraikkilanku, tiraiyappul, tirkkakantam, tulam, tulam 2, tunkamuttu#, tunkamuttukkilanku, tunkumustu, muttati 2, nanal, netila, vicciral#, vicciram, viccirappul, visakkani, ural, vacanaippulkilanku, vacciracalakkilanku, vacciracalam, vacciracelatam, vaccirakentam, vacciratilatam, varaki
Dates (Dried)Chhuara, KhajoorPeritcham Pazhamபேரிச்சம் பழம்
Dry gingerSonthChukkuசுக்கு
Dry GooseberryAwalaNellikkaiநெல்லிக்காய்
Dry plumsAlubhukharaAlu pakadaஅளுபகடா
EaglewoodAgarAhilikattaiஅஹிலிகட்டை
Eclipta, False daisy, Swamp daisy, White ecliptaBhringraj, Bhringaraj, Gunta kalagara, Karisha langanni, Kesharaji, Bhringraj (maka)Kaikeshi, Karishilanganni, Kaiyanthagaraiகைகேசி, கரிசிலாங்கண்ணி, கையாந்தகரை
Edible camphorKapoor or kapurPachai Kalpooramபச்சை கல்பூரம்
Eloopa treeMahuaaKattu iluppiகாட்டு இலுப்பி
EsculentflacourtiaBavachiThippa thogaiதிப்ப தோகை
FigsAmjeer, Anjur, AnjirAthi Pazham, Athipalamஅத்திப் பழம், அத்திப்பழம், அத்தி பழம்
Filbertnut, Filbert Nut, Hazelnuts, Manila nutChalguzamanila kottai / manilapayaruமணிலாக்கொட்டை / மணிலாப்பயறு
Flax hempPatshanaJanapanar, sanalசணல்
Folio malapathy, Cinnamonum tamalaTejpataLavangapaththiriலவங்கபத்திரி
GalangalKulinjanChitharatham, Chittharatham , Chiththaraththaiசித்தரதம், சித்தரத்தை
GallnutMayafalMasikkaiமாசிக்காய்
Gamboge thistle, Argemone mexicana. Jamaica yellow thistle, Mexican Poppy, Prickly Poppy, Yellow mexican poppySathyanaci, Satyanashi, Satyanasi, Bharbhand, Farangidhatura, Ujarkanta, Kutaila, Shial kanta, Brahmadandi, Kandiari, Katsi, Satyanasa, Hemashikha, Hemadugdha, Hemavati, KanchaniBiramnia thanddu Vidm, Bremadandu, Kurukkam, Brahmadandiபிரமணிய தண்டு விடம், பிரமதண்டு, குருக்கம், பிராமதண்டி
GarlicLasan, LahsunPoonduபூண்டு
GelatinSaresGelatinஜெலேடின்
Ghisaliatomentoza, Fire flame bushDhai Phool, Dhai-phulThathu kilanguதட்டு கிழங்கு
GingerAdrak, Sonth, Soonth, AdhrakIngiஇஞ்சி
Ginger (dry)Saunth, SonthSukku, Chukkuசுக்கு
SWEET FLAG, flagroot, sweet cane, sweet grass, sweetroot, sweet rush, ACORUS CALAMUS,Godavach, Bach, Ghorbach, Safed bachVashambu, pullai-valathiவசம்பு, புள்ளை-வளத்தி. பிள்ளை வளப்பான்
Large Caltrops, Pedalium murexGokhru BigYanai nerunjilயானை நெருஞ்சில்
Small Caltrops, Tribulus terrestrisGokhru ChottaPalleru-mullu ,Neranjalபல்லேறு-முள்ளு, நெரஞ்சல்
Green CardamomElaichi (Chhoti), Chhoti IlaichiPacchai Yelakkai (Chinnadhu), elakkai chinnathuபச்சை ஏலக்காய் (சின்னது)
GulanchaGeeloySinthila kothiசிந்தில கொதி
Gum benzionLobanSambraniசாம்பிராணி
Gum Copal Sandarack (or) Gummy gardimeaChandrasPinal maru, Chandrasagamபினால் மறு, சந்த்ரசகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்


தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும் ?


 நம்முடைய விண்ணப்ப மனு சாதாரண வெள்ளை தாளில் கைகளால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாக இருந்தாலே போதுமானது. மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்னென்ன ? , விண்ணப்பிக்கும் தேதி, இடம், விண்ணப்பிப்பவரின்  தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம் ஆகியவைகள் இடம் பெற வேண்டும்.

மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும். வெளிநாடு வாழ் கீழக்கரை சகோதரர்கள், தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்திரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்து கொள்ளலாம்.

நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்னென்ன கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமோ, அதனை சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை கேட்டுப்பெறலாம்.


எடுத்துக்காட்டாக, நம் கீழக்கரை நகராட்சிக்கு, பொது நலன் கருதி பொதுமக்களால் கேட்கப்பட்ட கேள்விகள் சில

1 ) கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை நம் கீழக்கரை நகராட்சியின் வரவு, செலவுகள் எவ்வளவு? முழு விபரம் தரவும்.

2 ) தற்போதைய நிதியாண்டில் (2011 -12 )  நகராட்சி தலைவர் பதவியேற்கும் போது நிதி நிலை எவ்வளவு?

3 ) கடந்த கீழக்கரை மூன்றாம் நிலை நகராட்சியின் நிர்வாகத்தில், சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு?

4 ) தற்போதைய சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்களின் சம்பளம் எவ்வளவு ?

அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ? என்று கூட நம்மால் கேட்க முடியும் !



 
சில மாதிரி கேள்விகள் தங்கள் பார்வைக்கு 

1. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

2. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

3. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

4. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?

6. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

7. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

8. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

9. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட அரசு அலுவலக பொது தகவல் அதிகாரிகளிடம் கேட்டுப் பெறலாம். அவர்கள் தகுந்த கால அவகாசத்தில் பதில் தராத போது மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.


மாநில அரசு தகவல்கள் பெற :- (Tamil Nadu Information Commission)

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,
அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )
தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email : sic@tn.nic.in http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :- (Central Information Commission)

Shri Satyananda Mishra

Chief Information Commissioner
Room No.306, II Floor
August Kranti Bhavan
Bhikaji Cama Place
New Delhi - 110 066.
Phone:- 011 - 26717355
E-mail :- s.mishra@nic.in http://cic.gov.in/

இந்த தகவல் அறியும் சட்டம் மூலமாக, எப்படி விண்ணப்பம் எழுதுவது? என்பது முதல் என்னென்ன கேள்விகள் கேட்கலாம்? எந்த மாதிரி கேள்விகள் கேட்கக் கூடாது? எப்படி மேல் முறையீடு செய்வது? என்பது வரை அத்தனை வழிகாட்டுதல்களையும் கீழ்வரும் இனைய தளம் நமக்கு வழங்குகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய இனைய தளம் 
http://rightact2005.blogspot.in/

தேசிய தகவல் மையம் - National Informatics Centre (NIC) 
http://rti.gov.in/ 

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத் தளம்


திருமணப்பதிவு கட்டாயம்

அது ஒரு காலம். பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலே வீட்டுக்குத் தெரியாமல், அல்லது வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ஏற்ற திருமணமுறை அது என்ற நிலை. தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை இப்போதும் அப்படித்தான் என்றாலும் உண்மை நிலை மாறிவிட்டது. பதிவுத் திருமணத்தைப் பொறுத்தவரை பலவித தவறான நம்பிக்கைகள் உலவுகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
தவறான நம்பிக்கை-1மாப்பிள்ளை மற்றும் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி மிகவும் நன்று தெரிந்திருந்தால் அந்த திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
உண்மை – அப்படியில்லை. நீங்கள் ஒருவரை சட்டப்பூர்வமாக மணந்திருக்கிறீர்கள் என்பதற்கான சான்றுதான் பதிவு செய்து கொள்வது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது மற்றும் உங்கள் பெயருடன் உங்கள் கணவர் பெயரையும் சேர்த்துப் பயன்படுத்தப் போகிறீர்கள் எனும்போது திருமணச் சான்றிதழ் மிகவும் அவசியம்.
தவறான நம்பிக்கை – 2ஹிந்து திருமண முறைப்படி திருமணம் நிச்சயமாகியிருந்தால் அந்த திருமணம் முடிந்த பிறகுதான் பதிவு செய்து கொள்ள முடியும்.
உண்மை – இது பொதுவான நடைமுறையாக உள்ளது. ஆனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பிறகு சம்பிரதாயத் திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம். வெளிநாட்டில் மணமகன் இருந்து திருமணமான சில நாட்களிலே மணமகள், அவருடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் முன்னதாகவே பதிவு செய்து கொண்டால் பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வசதி.
தவறான நம்பிக்கை – 3
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களுக்கு திருமணம் நடத்தித் தரவேண்டும் என்று பதிவாளர் அலுவலகத்திற்குப் போய் நின்றால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது பதிவாளரின் கடமை.
உண்மை – அப்படியில்லை. ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் தேவை. ஏற்கெனவே திருமணம் செய்து கொள்ளாதவராக (அல்லது திருமணம் ஆகியிருந்தால் உரிய முறையில் விவாகரத்து பெற்றவராக) இருக்க வேண்டும். அல்லது ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தால் துணைவர் இறந்திருக்க வேண்டும். மனநிலை சரியாக உள்ளவர்களுக்குத்தான் (அதாவது புத்திசுவாதீனம் உள்ளவர்கள்) திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் இருவரும் ஏற்கெனவே ரத்தவழி உறவுக்காரர்கள் என்றால் அவர்களுக்கு இடையே திருமணம் நடப்பது தடை செய்யப்பட்டிருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஹிந்துக்களில் சகோதரர்களின் குழந்தைகள், சகோதர சகோதரிகள்தான். பெரியப்பா மகனை சித்தப்பா மகள் திருமணம் செய்துகொள்ள சம்பிரதாயத்தின்படியும், சட்டப்படியும் அனுமதி கிடையாது.
தவறான நம்பிக்கை – 4
உரிய சான்றிதழ்களை மட்டும் கொடுத்துவிட்டால் காதலர்கள் அடுத்த நாளே பதிவாளர் அலுவலகத்தில் மாலை மாற்றிக் கொண்டு திருமணத்தைப் பதிவு செய்து கொண்டு விடலாம்.
உண்மை – ஸ்பெஷல் திருமணச் சட்டத்தின்கீழ் நடக்கும் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான அறிவிப்பை மணமக்களில் ஒருவர் திருமண அதிகாரிக்குக் கொடுக்க வேண்டும். அந்த அறிவிப்பை பதிவாளர் அலுவலகத்தில் பளிச் சென்று தெரியக்கூடிய ஓர் இடத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைப்பார்கள். இதிலிருந்து முப்பது நாட்கள் முடிந்தவுடன் அந்தத் திருமணத்திற்கு யாரும் ஆட்சேபணை எழுப்பவில்லை என்றால் திருமணம் நடந்து அங்கேயே பதிவு செய்யப்படும். அப்படி ஆட்சேபணை கிடைக்கப் பெற்றால் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்மானம் எடுக்கப்படும்.
கூடுதல் செய்தி:
இப்போதெல்லாம் திருமண மண்டபத்துக்கே வந்து கூட திருமணத்தை பதிவுசெய்கிறார்கள். இதற்கான தனிக்கட்டணம் உண்டு. என்றாலும் கையோடு சான்றிதழையும் சத்திரத்திலேயே கொடுத்துவிட மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் பெற்றுக் கொள்ளவேண்டும். பதிவுசெய்த அன்றேகூட இந்தச் சான்றிதழைப் பெறமுடியும்.
படிவம் 1ம் மணமக்களோடு, திருமணத்க்கு வந்திருந்த வேறு இரண்டுபேரும் சாட்சி அளிக்கவேண்டும்.
இந்தக் காலத்தில் பெரியவர்களின் ஆசி, மணமக்களின் விருப்பம் இவற்றைப் போலவே சட்டத்தின் துணையும் மிக அவசியம் என்றாகிவிட்டது. எனவே சட்டம் அளிக்கும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

கண்டுபிடிப்பு
கண்டுபிடிப்பாளர்
                 ஆண்டு
ஆகாய விமானம் (Aeroplane)
ரைட் சகோதரர்கள்
1903
தூசிப்படலம் (Aerosol))
எரிக் ரோதிம்
1926
காற்றுக் குழாய் (Air pump))
ஒட்டோ வான் கியூரிக்
1654
ஆம்புலன்ஸ் (Amnulance)
பரோன் டொமினிக் ஜீன் லேரி
1792
அனஸ்தீஸியா (Anaesthesia)
வில்லியம் மோர்டன்
1846
நீர் மூழ்கு குழாய் (Aqualung)
கௌஸ்டியா மற்றும் காங்னன்
1943
ஆஸ்பிரின் (Aspirin)
கோல்பே, ஹெயின்ரிச்
1859
ஆஸ்பிரின் (Aspirin) (மருந்தாக)
ஹெச் டிரெசர் (பாயர் ஏஜி)
1899
அணு குண்டு (Atom bomb)
ஃபிரிச், போஹ்ர், பைரல்ஸ்
1939
அடைகாப்புக் கருவி (Baby incubator)
டாக். அலெக்ஸாண்டர் லயன்
1891
பாக்லைட் (Bakelite)
லியோ ஹெச் பேக்லேண்ட்
1907
பலூன் (Balloon)
மோன்ட்கோல்பியர் சகோதரர்கள்
1783
பேனா (பால் பாய்ன்ட்) (Ball-point-pen)
ஜான் டி லொடு
1888
பாரோமீட்டர் (Barometer)
இவாஞ்செலிஸ்டா டோரிசிலி
1643
மின்கல அடுக்கு (Battery-Electric)
அலெசான்ட்ரோ வால்டா
1800
மின்சார மணி (Bell-Electric)
ஜோசப் ஹென்றி
1831
மிதிவண்டி (Bicycle)
கிர்க்பேட்ரிக் மேக்மில்லன்
1839
மிதிவண்டி (ஸ்போக்ட் வீல்ஸ்) (Bicycle)
ஜேம்ஸ் ஸ்டார்லே
1870
இரட்டைக் குவி ஆடி (Bifocal Lens)
பெஞ்சமின் பிராங்ளின்
1780
பெண்கள் உள்ளாடை (கான்டிலீவர்) (Bra)
ரோபர்ட் ஹாவேர்ட் ஹக்ஸ்
1943
புகையில்லா அடுப்பு (Bunsen Burner)
ரோபர்ட் வில்கெல்ம் பன்சென்
1855
திருட்டை அறிவிக்கும் கடிகாரம் (Burglar alarm)
எட்வின் டி ஹோல்ம்ஸ்
1858
கேபிள் கார் (Cable-car)
டபிள்யூ ரிட்டர்
1866
கூட்டல் இயந்திரம் (Calculating clock)
வில்ஹெம் ஷிக்கர்டு
1623
கேல்குலஸ் (Calculus)
லீப்னிஸ் மற்றும் நியூட்டன்
1684
கார் (பெட்ரோல்) (Car-Petrol)
கார்ல் பென்ஸ்
1888
கார் விரைவுமானி (Car speedometer)
தோர்ல் மற்றும் சால்ட்டர்
1902
கார்பன் காகிதம் (Carbon paper)
ரால்ஃப் வெட்ஜ்வுட்
1806
கார்புரேட்டர் (Carburettor)
கோட்லிப் டைம்லர்
1876
செல்லோபேன் (Cellophane)
டாக். ஜாக்வஸ் பிராண்டென் பிரெகர்
1908
சிமெண்ட் (போர்ட்லேண்ட்) (Cement)
ஜோசப் ஆஸ்ப்டின்
1742
சூயிங் கம் (Chewing gum-commercial)
ஜான் குர்டிஸ்
1848
சாக்லேட் (Chocolate –solid)
பிரான்கோயிஸ் லூயிஸ் கைலர்
1819
கால அளவி (Chronometer)
ஜான்ஹாரிசன்
1735
சினிமோட்டோகிராஃபி (Cinematography)
லியூமியர் சகோதரர்கள்
1895
இரத்த ஓட்டம் (Circulation of the blood)
வில்லியம் ஹார்வி
1628
கடிகாரம் (Clock-Quartz)
வாரன் ஆல்வின் மேரிசன்
1929
கடிகாரம் (Clock-Mechanical)
ஹிஸிங் மற்றும் லியாங் ட்சன்
1725
கோக கோலா (Coca-Cola)
டாக். ஜான் பெம்பர்ட்டன்
1886
காப்பி (Coffee-instant)
நெஸ்ட்லே
1937
காம்ப்பேக்ட் டிஸ்க் (Compact disc)
பிலிப்ஸ் மற்றும் சோனி
1979
கம்ப்யூட்டர் (Computer)
சார்லஸ் பாப்பேஜ்
1835
கம்ப்யூட்டர் (Computer Electronic)
எக்கெர்ட் மற்றும் மேச்லி
1946
கட்டிப்பால் (/condensed Milk)
கெய்ல் போர்டன்
1858
தடுப்புறை (Condom)
கேப்ரில் பாலோபியஸ்
1560
கான்டாக்ட் லென்ஸ் (Contact lens)
அடால்ப் இ பிக்
1887
கருத்தடை மாத்திரை (Contraceptive pill)
டாக். கிரீகொரி பின்கஸ்
1950
கிரெடிட் கார்டு (Credit Card)
ரால்ப் ஸ்ஷைடர்
1950
டிஎன்ஏ வடிவமைப்பு (DNA structure)
பிரான்சிஸ் கிரிக் மற்றும் ஜேம்ஸ் வாட்சன்
1953
துளைக்கும் இயந்திரம் (Drill-electric)
வில்ஹம் ஃபெயின்
1895
உலர் சலவை (Dry-cleaning)
எம் ஜோலி பெலின்
1849
டைனமைட் (Dynamite)
ஆல்பிரட் நோபல்
1863
டைனமோ (Dynamo)
ஹிப்போலைட் பிக்ஸி
1832
மின்சார நாற்காலி (Electric Chair)
ஹெரால்டு பிரௌன் மற்றும் ஈஏ கென்னாலி
1890
மின் விசிறி (Electric fan)
டாக். ஸ்கைலர் ஸ்காட்ஸ்
1882
எலக்ட்ரிக் ஜெனரேட்டர் (Electric generator)
மைக்கேல் பாரடே
1831
எலக்ட்ரிக் கிதார் (Electric guitar)
ரிக்கென்பாகெர், பர்த் மற்றும் பியூசேம்ப்
1931
மின்விளக்கு (Electric lamp)
ஜோசப், ஸ்வான் மற்றும் எடிசன்
1879
மின் மோட்டார் (ஏசி) (Electric motor)
நிக்கோலா தெல்சா
1888
மின் மோட்டார் (டிசி) (Electric motor)
ஸெனோப் கிராம்
1873
இ.சி.ஜி. (Electrocardiography)
வில்லியம் இன்தோவென்
1903
எலக்ட்ரோமேக்னட் (Electromagnet)
வில்லியன் ஸ்டர்ஜியன்
1824
எலக்ட்ரான் (Electron)
ஜேஜே தாமஸ்
1897
என்டோஸ்கோப் (Endoscope)
பியர்ரே செகாலஸ்
1827
எஸ்கலேட்டர் (Escalator)
ஜெஸி டபிள்யு ரெனோ
1892
ஆச்சரியக்குறி (Exclamation mark)
ஜே டே
1553
ஃபேக்ஸ் (Fax)
ஆர்தர் கார்ன்
1907
புகைப்படம் (Film-moving outlines)
லூயிஸ் லீ பிரின்ஸ்
1885
புகைப்படம் (Film Talking)
மியூசொல் மற்றும் வாக்ட்
1922
புகைப்படம் (Film-musical sound)
லீ டீ ஃபாரஸ்ட்
1923
ஃபோம் ரப்பர் (Foam-rubber)
ஜான் பாய்டு டன்லப்
1929
உணவு பதப்படுத்தல் (Food processor)
கென்னத் உட்
1947
இங்க் பேனா (Fountain Pen)
லூயிஸ் எட்சன் வாட்டர்மேன்
1884
குளிர்ப்பதன உணவு (Frozen food)
கிளாரென்ஸ் பேர்ட்லேயே
1930
ஆவி விளக்கு (Gas lighting)
வில்லியம் மர்டக்
1792
ஆவி மானி (Gas meter)
வில்லியம் க்ளெக்
1815
கியர்பாக்ஸ் (Gearbox –Automatic)
ஹெர்மன் போட்டிங்கர்
1910
மரபணு (Genetics)
கிரெகர் மெண்டல்
1865
கிளைடர் (Glider)
சார் ஜார்ஜ் கைலே
1853
இசைத்தட்டுப் பெட்டி (Gramophone)
தாமஸ் ஆல்வா எடிசன்
1878
புவியீர்ப்பு விசை (Gravitation)
ஐசக் நியூட்டன்
1684
காதொலிக் கருவி (Hearing aid – electric)
மில்லர் ரீஸ் ஹட்சின்சன்
1901
செயற்கை இதயம் (Heart-artificial)
விளாடிமிர் டெமிக்கேவ்
1937
ஹெலிகாப்டர் (Helicopter)
லூயிஸ் மற்றும் ஜாக்வெஸ் பிரெகெட்
1907
ஹோலோகிராபி (Holography)
டென்னிஸ் கேபர்
1947
ஹோவர்கிராப்ட் (Hovercraft)
கிறிஸ்டோபர் காக்ரெல்
1955
இன்சுலின் (Insulin)
பிரெடரிக் கிரான்ட் பண்டிங் மற்றும்
1921
ஐஸ்கிரீம் கோன்ஸ் (Ice-cream-cones)
இடேலோ மார்சியோனி
1896
ஜீன்ஸ் (Jeans)
லீவி ஸ்டிரேஸ்
1850
ஜெட் கருவி (Jet-engine)
சார் பிராங்க் விட்டல்
1937
குறுக்கெழுத்துப் போட்டி (Jigsaw puzzle)
ஜார்ஜ் ஸ்பில்ஸ்பியரி
1767
தையல் இயந்திரம் (Knitting machine)
வில்லியம் லீ
1589
லேசர் (Laser)
தியோடர் மைமேன்
1960
லேத், ஸ்க்ரு கட்டிங் (Lathe, screw-cutting)
ஹென்றி மவுட்ஸ்லே
1800
லான் மூவர் (Lawn mower)
எட்வின் புட்டிங் மற்றும் ஜான் பெராபி
1830
பொய்யறி கருவி (Lie detector)
ஜான் லார்சன்
1928
லிப்ட் (Lift)
எலீசா ஜி. ஒட்டிஸ்
1852
லைட்டிங் கண்டக்டர் (Lighting conductor)
பெஞ்சமின் பிராங்ளின்
1752
லித்தோகிராபி (Lithography)
அலாய்ஸ் செனபெல்டர்
1796
இரயில் பெட்டிகள் (Locomotive)
ரிச்சர்டு ட்ரெவிதிக்
1804
லாக்ரிதம்ஸ் (Logarithms)
ஜான் நேப்பியர்
1614
விசைத்தறி (Loom, power)
எட்மட் கார்ட்ரைட்
1785
ஒலிபெருக்கி (Loudspeaker)
ஹோரேஷ் ஷோர்ட்
1898
இயந்திர துப்பாக்கி (Machine gun)
ஜேம்ஸ் பக்கிள்
1718
தீப்பெட்டி (Match-safety)
ஜெஇ லுண்ட்ஸ்ட்ரோம்
1855
மைக்ரோசிப் (Microchip)
ஜாக் செயின்ட் கிளேர் கில்பி
1958
மைக்ரோபோன் (Microphone)
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
1876
மைக்ரோ-புரோஸசர் (Micro-processor)
மூர் மற்றும் ஹாஃப் நாய்ஸ்
1971
பூதக்கண்ணாடி (Microscope)
சச்சாரியாஸ் ஜேன்ஸ்சன்
1590
மைக்ரோவேவ் ஓவன் (Microwave oven)
பெர்சி ஸ்பென்சர்
1945
சுரங்கப்பாதுகாப்பு விளக்கு (Miner’s safety lamp)
சார் ஹம்ப்ரி டாவே
1816
ஏவுகணை (Missle (air-to-air))
ஹெர்ப்ரெட் வாக்னர்
1943
மோட்டார் சைக்கிள் (Motor-cycle)
கோட்லிப் டைம்லர்
1885
நியோன் விளக்கு (Neon lamp)
ஜார்ஜ்ஸ் க்ளெடி
1910
நெப்டியூன் (Nepture (planet))
ஜானன் கோட்ஃபிரெட் கல்லே
1846
நியூட்ரான் (Neutron)
ஜேம்ஸ் சாட்விக்
1935
அடி ஒட்டா பாத்திரம் (Non-stick-pan)
மார்க் கிரகோயார்
1954
நைலான் (Nylon)
வால்லஸ் கரோதர்ஸ்
1937
ஔியிழைக் கேபிள் (Optical fibres)
நவீன்தர் கபானி
1955
ஓவன் (Oven-electric)
பெர்னினா ஹோட்டல், சுவிட்சர்லாந்து
1889
ஓசோன் (Ozone)
கிறிஸ்டியன் ஃப்ரெடரிக் ஸ்கோன்பின்
1840
பேஸ்மேக்கர் (Pacemaker-implantable)
வில்சன் கிரேட்பச்
1956
பெயின்ட் (Paint-acrylic)
ரிவீஸ் லிமிடெட்
1964
பெயின்ட் (Paint-fluorescent)
ஜோ மற்றும் பாப் சுவிட்சர்
1933
பறக்கும் குடை (Parachute-patent)
ஆன்ட்ரே ஜாக்குவஸ் கார்னெரின்
1802
பால் பதனீடு (Pasteurisation)
லூயிஸ் பாஸ்டியுர்
1863
பென்சில் (Pencil)
நிக்கோலஸ் ஜாக்குயிஸ் கோண்ட்
1795
கடிகாரம் (Pendulum clock)
கிறிஸ்டியன் ஹஜன்ஸ்
1656
பென்சிலின் (Penicillin)
சர் அலெக்ஸாண்டர் பிளெம்மிங்
1928
கால அட்டவணை (Periodic table)
டிமிட்ரி மெண்டலேவ்
1866
நிழற்படக் கண்ணாடி (Photographic lens)
வில்லியம் ஹெச் ஊலாஸ்டன்
1812
நிழற்படக் காகிதம் (Photography on paper)
வில்லியம் ஹென்றி ஃபாக்ஸ் டால்போட்
1835
நிழற்படம் (கலர்) (Photography-colour)
ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல்
1861
நிழற்படம் (திரைப்படம்) (Photography-film)
ஜாண் கார்பட்
1888
பியானோ (Pianoforte)
பார்த்தோமோலியோ கிறிஸ்டோஃபோரி
1709
பிளாஸ்டிக் (Plastic)
அலெக்ஸாண்டர் பர்க்கிஸ்
1852
புளூட்டோ (Pluto)
கிளைடு டாம்பக்
1930
பாக்கெட் கால்குலேட்டர் (Pocket-calculator)
கில்பி, தாசல் மற்றும் மேரிமேன்
1972
போலியோ தடுப்பூசி (Polio vaccine)
ஜோனஸ் சால்க்
1952
போலியோ தடுப்பு (Polio vaccine-oral)
ஆல்பிரெட் சபின்
1957
பாலிதின் (Polythene)
ஆர் ஒ கிப்சன்
1933
உருளைக்கிழங்கு சிப்ஸ் (Potato Crisps)
ஜார்ஜ் கிரம்
1853
பிரஷர் குக்கர் (Pressure cooker)
டெனிஸ் பாப்பின்
1679
அச்சுத் தொழிற்சாலை (Printing press)
ஜானன் கூடன்பர்க்
1455
பிரிண்டிங் (Printing-rotary)
ரிச்சர்டு ஹோ
1846
கப்பலின் இயக்குருப்பு (Propeller-ship)
பிரான்சிஸ் சுமித்
1837
புரோட்டான் (Proton)
எர்னஸ்ட் ரூதர்போர்டு
1920
தொலைநோக்கி இயக்கமானி (Radar-application)
டாய்லர் மற்றும் யங்
1930
தொலைநோக்கி இயக்கமானி (Radar-theory)
நிக்கோலா டெஸ்லா
1900
ரேடியோ டெலிகிராமி (Radio-telegraphy)
மாஹ்லோன் லூமிஷ்
1864
ரேடியோ டெலிகிராபி (transatlantic)
குக்லிமோ மார்கோனி
1901
கதியிரியக்கம் (Radioactivity)
ஹென்றி பெக்குரல்
1896
தண்டவாளம் (Rails-iron)
ஆப்ரஹாம் டர்பி
1738
ரயில்வே ஏர்பிரேக் (Railway airbrake)
ஜார்ஜ் வெஸ்டிங்கவுஸ்
1863
ரயில்வே (Railway – electric)
எர்ன்ஸ்ட் சைமன்ஸ்
1878
ரயில்வே (Railway-underground)
சார்லஸ் பெர்சன்
1843
ரேயான் (Rayon)
ஜோசப் ஸ்வான்
1883
சவரக் கத்தி (Razor-safety)
கிங் காம்ப் கில்லட்
1895
மின்சார சவரக்கத்தி (Razor-electric)
ஜேக்கப் ஷிக்
1931
சுழல் துப்பாக்கி (Revolver)
சாமுவேல் கோல்ட்
1835
ரிக்‌ஷா (Rickshaw)
ஜொனாதன் ஸ்கூபி
1869
ரோலர் ஸ்கேட்ஸ் (Roller skates)
ஜோசப் மெர்லின்
1760
ரப்பர் (Rubber-latex foam)
டன்லப் ரப்பர் கோ
1928
ரப்பர் (Rubber-tyres)
தாமஸ் ஹான்காக்
1846
ரப்பர் (Rubber-vulcanised)
சார்லஸ் மெக்கின்டோஷ்
1823
ரூபிக் கியூப் (Rubik cube)
ஏர்னோ ரூபிக்
1975
சேஃப்டி பின் (Safety pin)
வால்டர் ஹன்ட்
1849
ஸ்கூட்டர் (Scooter)
வால்டர் லைன்ஸ்
1897
அரக்கு (Sealing wax)
ஜெரார்ட் கெர்மேன்
1554
நிலநடுக்க அளவி (Seismographic scale)
சார்லஸ் பிரான்ஸிஸ் ரிச்டர்
1935
தையல் கருவி (Sewing machine)
தாமஸ் செயின்ட்
1790
சுறுக்கெழுத்து (Shorthand)
மார்கஸ் டுல்லிஸ் டிரோ
கி.மு.63
சுறுக்கெழுத்து (Shorthand-modern world)
திமோதி பிரைட்
1588
ஸ்னுக்கர் (Snooker)
சர் நெவில்லே சேம்பர்லியன்
1875
ஸ்பின்னிங் ஃபிரேம் (Spinning frame)
ரிச்சர்டு ஆர்க்ரைட்
1769
இயந்திர நூற்புக் கருவி (Spinning Jenny)
ஜேம்ஸ் ஹார்கிரீவாஸ்
1764
நூல் நூற்கும் இயந்திரம் (Spinning mule)
சாமுவேல் குரோம்ப்டன்
1779
தாள்தைப்பு முள் கருவி (stapler)
சார்லஸ் ஹென்ஹி கெளல்ட்
1868
நீராவி இயந்திரம் (Steam engine)
தாமஸ் சவேரி
1698
நீராவி இயந்திரம் (Steam engine-piston)
தாமஸ் நியூகாமன்
1712
நீராவி இயந்திரம் (Steam-engine-condenser)
ஜேம்ஸ் வாட்
1765
நீராவிக் கப்பல் (Steamship)
ஜெசி. பெரியர்
1775
நீராவி டர்பைன் (Steam turbine)
சார்லஸ் பார்சன்ஸ்
1894
உருக்கு உற்பத்தி (Steel production)
ஹென்றி பெஸமர்
1855
உருக்கு (Steel-stainless)
ஹாரி பியார்லே
1913
ஸ்டெதஸ்கோப் (Stethoscope)
ரெனே லீன்னெக்
1816
ஸ்டாப்வாட்ச் (Stopwatch)
ஜீன் மாய்ஸே
1776
நீர்மூழ்கி (Submarine)
கார்னிலியஸ் ஜேக்கப்சூன் ட்ரெபெல்
1624
சிரிஞ் (Syringe-hypodermic)
சார்லஸ் கேப்ரியேல் பிரவாஸ்
1835
டேபிள் டென்னிஸ் (Table tennis)
ஜேம்ஸ் கிப்
1890
பீரங்கி வண்டி (Tank)
எர்னெஸ்ட் ஸ்வின்டன்
1914
டேப் ரிக்கார்டர் (Tape recorder)
லூயிஸ் பிளாட்னர்
1929
தந்திப்பொறி (Telegraph –electric)
ஜார்ஜ லூயிஸ் லிசேஜ்
1774
தந்திப்பொறி (Telegraph)
எம் லேம்மன்ட்
1787
தந்திக் குறியீடு (Telegraph code)
சாமுவேல் மோர்ஸ்
1837
தொலைபேசி (Telephone)
ஆன்டோனியோ மியூசி
1849
தொலைபேசி (Telephone-patent)
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
1876
டெலஸ்கோப் (Telescope-refractor)
ஹான்ஸ் லிப்பெர்ஷே
1608
டெலிவிஷன் (Television-mechanical)
ஜான் லூகி பைர்டு
1926
டென்னிஸ் (Tennis)
வால்டர் ஜி விங்பீல்டு
1873
தெர்மோமீட்டர் (Thermometer)
கலிலியோ கலிலி
1593
தெர்மோமீட்டர் (Thermometer-mercury)
கேப்ரியேல் ஃபாரன்ஹுட்
1714
டூத்பிரஸ் (Toothbrush)
வில்லியம் ஆடிஸ்
1649
நீர்மூழ்கிக் குண்டு (Torpedo)
ரோபர்ட் ஒயிட் ஹெட்
1866
டிராபிக் லைட்ஸ் (Trafic lights)
ஜெபி கினைட்
1868
மின்மாற்றி (Transformer)
மைக்கேல் ஃபாரடே
1831
பயண நிறுவனம் (Travel agency)
தாமஸ் குக்
1841
பயணிகள் காசோலை (Travellers cheques)
ரோபர்ட் ஹெரிஸ்
1772
விசைப்பொறி உருளை (Turbo Jet)
பிராங்க் விட்டல்
1928
தட்டச்சுப்பொறி (Typewriter)
பெல்லிகிரின் டாரி
1808
தட்டச்சுப்பொறி (Typewriter-patent)
வில்லியம் பர்ட்
1829
தட்டச்சுப்பொறி (Typewriter-mass production)
கிறிஸ்டோபர் ஷோல்ஸ்
1874
அம்மைக் குத்துதல் (Vaccination)
எட்வர்ட் ஜென்னர்
1770
வாக்வம் கிளீனர் (Vacuum cleaner-electric)
ஹியூப்பிரெட் செசில் பூத்
1901
ஃபிளாஸ்க் (Vacuum flask)
ஜேம்ஸ் தேவார்
1871
வீடியோ ரெக்கார்டர் (Video Recorder)
ஆம்பெக்ஸ் கோ
1956
வாஷிங் மெஷின் (Washing machine-electric)
ஹர்லே மெஷின் கார்ப்பரேஷன்
1907
கைக் கடிகாரம் (Watch-waterproof)
ரோலக்ஸ்
1927
கைக்கடிகாரம் (Watch)
பார்த்தோலோமி மேன்பிரிடி
1462
மின்சார பற்றவைப்பான் (Welder-electric)
எலிஷா தாம்சன்
1877
சக்கரம் (Wheel)
மெசப்போடாமியர்
சுமார் கி.மு.3500
வெள்ளை சாலை குறியீடு (White road marking)
எட்வர்ட் நாரிஸ் ஹைன்ஸ்
1911
ஜெராக்ஸ் (Xerox copier)
செஸ்டர் கார்ல்சன்
1938
எக்ஸ்ரே (X-ray)
வில்ஹெம் கோன்ரேட் ரோன்ட்ஜன்
1895
சிப் ஃபாஸ்ட்னர் (Zip fastener)
விட்காம்ப் எல் ஜீட்சன்
1891