Tuesday, August 27, 2013

அறிந்து வைத்துக் கொள்வோம்..

அறிந்து வைத்துக் கொள்வோம்..
.........................................................
*காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

மாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

*அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.

*ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous..

*"The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.

*abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.

*ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.

*ஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர்.

*ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.

*மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது..

*இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம்.

இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள்.

நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.

* a,b,c,d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை..

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

கறிவேப்பிலை:- நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.

புதினா:- நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.

கற்பூர வல்லி (ஓமவல்லி):- மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்.

வல்லாரை:- நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

செம்பருத்தி:- மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.

மணத்தக்காளி கீரை:- இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம்.

தும்பை:- பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.

குப்பைமேனி:- ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.]

Monday, August 5, 2013

அக்குபங்சர் சிகிச்சையும் சில எச்சரிக்கைகளும் !!!


பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து நமக்கு மனதின் ஓர் ஓரத்தில் சிறு சந்தேகம் உறைந்து கிடக்கும். அவை குணப்படுத்துகின்றனவா அல்லது குணப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றனவா என்று.
அந்த வகையில், ‘அக்குபங்சர்’ எனப்படும் ஊசிகளால் குத்தி அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை உண்மையில் நலமளிக்கிறதா, அப்படியொரு எண்ணத்தைக் கொடுக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதற்காக, ஜெர்மனி, ஸ்பெயின், ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 18 ஆயிரம் நோயாளிகளின் முந்தைய மருத்துவ அறிக்கைகள் அலசப்பட்டன. அப்போது முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தோள்பட்டை வலி, தீராத தலைவலி போன்ற நீடிக்கும் வலிகளுக்கு வழக்கமான மருத்துவ முறைகள் தந்த பலனும், அக்குபங்சர் அளித்த பலனும் ஒப்பிடப்பட்டது.
அப்போது கிடைத்த முடிவில் மேற்கண்ட நான்கு வலிகளையும் கட்டுப்படுத்துவதில் வழக்கமான மருத்துவ முறைகளை விட, அக்குபங்சர் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த தகவல், நீண்ட நாள் வலிகளால் அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
அக்குபங்சர் மருத்துவம் மிக எளிமையானது, பக்க விளைவில்லாதது, பாதுகாப்பானது தான், என்றாலும் உயிரோடு தொடர்புடைய ஒரு பணி என்பதால் நாம் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. இக்கண்ணோட்டத்தின் அடிப்படையிலே உலக சுகாதார நிறுவனம் அக்குபஞ்சர் பயிற்சியை பாதுகாப்பாக மேற்கொள்வது பற்றிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு அக்குபங்சர் பயிற்சியாளரும் கீழ்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் அவசியம்.
1. பணிச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல்
2. கைகளை தூய்மையாக வைத்திருத்தல்
3. குத்தப்போகும் அக்கு புள்ளியை ஸ்பிரிட் கொண்டு தயார் படுத்துதல்.
4. உரிய வகையில் பாதுகாக்கப்பட்ட குறைபாடில்லாத ஊசி மற்றும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
5. பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் பஞ்சு ஆகிய கழிவுகளை கவனமாய் துப்புரவு படுத்த வேண்டும்.
6. கர்ப்பமுற்ற பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சையளித்தலை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
7. மருந்து சார்ந்த முதலுதவி மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் அவசர நேரங்களில்
அக்குபங்சர் சிகிச்சையளித்தல் பலனளிக்காது.
8. புற்று கட்டிகள் மற்றும் கேடு விளைவிக்கும் அழுகிய கட்டிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை தனித்து உதவாது. மேலும் அத்தகைய கட்டியுள்ள பகுதிகளில் உள்ள அக்கு புள்ளிகளில் ஊசி செருகுதலை தவிர்க்க வேண்டும்.
9. கடும் இரத்தப்போக்கு, இரத்தத் தேக்கம் உள்ள நோயாளிகள், இரத்த உறைவை உருவாக்கும் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் மற்றும் இரத்த உறைவு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஊசி குத்துதலை தவிர்க்க வேண்டும்.
10. துருப்பிடிக்காத இரும்பு அல்லது வேறு வகையான உலோகங்கள் என எதில் தயாரிக்கப் பட்ட ஊசியினாலும் அதனை பயன்படுத்தும் முன் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
11. வளைந்த ஊசி, கொக்கி போன்ற முனையுடைய ஊசி, முனை மழுங்கிய ஊசி, சேத மடைந்த ஊசி போன்றவை கேடு விளைவிப்பவை. அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
12. ஊசி ஏற்றுவதற்கு முன் நோயாளியை அவருக்கு வசதியானவாறு இருக்கச்செய்ய வேண் டும். சிகிச்சையளிக்கும் போது இருக்கும் நிலையை துயரர் மாற்றிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
13. முதல் முறையாக அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளியை கிடை நிலையில் மென்மையாகவும், திறமையாகவும் கையாள வேண்டும். சில நேரங்களில் மயக்க உணர்வு ஏற்படலாம் என்பதை முன்னதாகவே தெரிவித்திட வேண்டும்.
14. ஊசி ஏற்றிய பின் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனித்து வர வேண்டும். நாடி பரிசோதனை அடிக்கடி செய்து வர வேண்டும்.
15. ஊசியேற்றும் போது மயக்கம், கிறுகிறுப்பு, அசௌகரியம். பலவீனம், பசி, வாந்தி, குமட்டல், படபடப்பு, குளிர், குளிர்ந்த வியர்வை போன்றவை ஏற்பட்டால் அவை எச்சரிக்கை குறிகளாகும். எச்சரிக்கை குறிகள் ஏற்பட்டால் உடனடியாக ஊசியை நீக்கி விட்டு கால் நீட்டி கிடைநிலையில் படுக்க வைக்க வேண்டும்.
16. சமநிலைக்கு சற்று தலையை தாழ்த்தி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் வெதுவெதுப்பான இனிப்பு பானங்கள் அருந்தச்செய்யலாம். அவசியமெனில் சூழலுக்கேற்ப CV6, P6, DU20 ஆகிய புள்ளிகளை கையாளலாம்.
17. அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் அனைத்தும் நோயாளிகளிடமும் வலிப்பு வந்ததுண்டா என விசாரித்தறிய வேண்டும். ஊசி ஏற்றும் போது வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக வேறு மருத்துவ முறைக்கு மாற்றிட வேண்டும்.
18. திறமையான ஊசியேற்றலில் பெரும்பாலும் நோயாளிகள் வலியை உணர்வதில்லை. ஊசி யேற்றிய புள்ளியில் லேசான வலி, கூச்சம் மதமதப்பு கனத்த உணர்வு ஏற்பட்டால் ஆற்றல் தூண்டப்பட்டு நன்கு வினைபுரிகிறது என பொருள். ஊசியேற்றிய பின் கடு கடுக்கும் ஊசியை நீக்கிவிட்டு சரியான புள்ளியில் குத்த வேண்டும். ஊசியை நீக்கிய பின், புள்ளிகளில் லேசாக அழுத்துதல் அவசியம்.
19. அக்குபங்சர் என்பது ஊசியேற்றுதல் மட்டமல்ல.
அக்குபங்சர் – எலக்ட்ரோ – அக்குபங்சர், லேசர் அக்குபங்சர், மாக்ஸிபஸன், கப்பிங், ஸ்கிராபிங் மற்றும் காந்த சிகிச்சை ஆகியவையும் அடங்கும்.
20. குழந்தைகளின் உச்சிகுழி, புற பிறப்பு உறுப்புகள், மார்பு காம்பு, தொப்புள் மற்றும் கண்மணிகளில் கண்டிப்பாக ஊசியேற்றக் கூடாது.
*இந்த எச்சரிக்கை குறிப்புகளையும், அக்குபங்சர் நிபுணர்களின் அனுபவ ஆலோசனை களையும் கவனத்தில் கொண்டு செயல்படும் அக்குபங்சர் பயிற்சியாளருக்கு தோல்வி என்பதே இல்லை.