Thursday, July 12, 2012

பூண்டு





புல், பூண்டுகளும், செடி, கொடி, பச்சிலைகளும் மனித வர்க்கத்திற்கு நோய் தீர்க்கும் சஞ்சீவிகளாக விளங்கி வருகின்றன. அவைகள் அன்றும் - இன்றும் - என்றும் இயற்கை தரும் சத்துணவாகவும், இன்மருந்தாகவும் நமக்கு பயன்பட்டு வருகின்றன.

நலிவு தரும் நோய் நீக்கும் நல்பொருட்களில் முதலிடம் பெறுவதில் பூண்டும் ஒன்று என்றால் அது மிகையல்ல. இதில் புரோட்டீன், விட்டமின் பி, விட்டமின் சி, பொஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்து உள்ளன. 

உடலில் உள்ள கொழுப்புச் சத்தை, கணிசமாக குறைக்க வல்லது வெள்ளைப்பூண்டு. தொடர்ந்து 3 மாதங்கள் வெள்ளைப்பூண்டு சாப்பிட்டுவர, நமது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுக்குள் வரும். 

வெள்ளைப் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உணவின் மணம், சுவை அதிகரிப்பதுடன் உடலில் ஏற்படும் வாயுக் கோளாறினை நீக்கி, உடல் சூட்டினைத் தணிக்கின்றது. மேலும் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் தொடர்ந்து, பூண்டை பாலுடன் வேக வைத்துக் கொடுப்பதால் போதிய அளவு பால் சுரக்க உதவுகின்றது.

இதுதவிர பூண்டு உடலில் கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. பூண்டைப் பாலுடன் வேக வைத்தோ, அதை உரித்து வாயில் மென்று விழுங்கினாலோ பத்தே நாட்களில் அது கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. குடலில் உள்ள அமியாபீஸில் என்ற உடலுக்கு தீங்கு செய்யும் நுண்ணிய கிருமியை முழுமையாக ஒழித்து விடுகின்றது. இந்தக் கிருமிகளை ஆங்கில மருந்துகளால் கூட முழுமையாக ஒழிக்க முடியாது. பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்க உதவுகிறது.

இருமல், கக்குவான், ரத்த அழுத்தம், வாயுத் தொல்லை ஆகியவற்றுக்கும் பூண்டு கைகண்ட மருந்தாகும்.

பூண்டு சாற்றில் நவரசத்தைக் குழைத்து வெண்குஷ்டத்தின் மேல் தடவி வர, நிறம் மாறி இயற்கை நிறம்பெறும். பூண்டின் பற்களைப் பாலில் அரைத்து பருக்களின் மீது பூசி வர பருக்கள் உடைந்து விடும். 10 கிராம் பூண்டின் பற்களை 30 மில்லி நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சவும், பூண்டு மிதந்தவுடன் வடிகட்டி, ஆறியவுடன் காதில் 2 அல்லது 3 துளிகள் விட காது வலி குணமாகும்.

பூண்டின் சாற்றினை உள்நாக்கில் பூசிவர அதன் வளர்ச்சி குறைந்து அதனால் ஏற்படும் இருமல், அரிப்பு, வீக்கம் குறையும்.

பூண்டு லேகியம் புத்துணர்வு தரும் லேகியங்களில் ஒன்றாகும். உரித்த மலைப் பூண்டு 400 கிராம் எடுத்து, அதைச் சுத்தமாக்கி ஒரு லிட்டர் பசும்பாலில் போட்டு வேகவைத்து அதில் 400 கிராம் பனை வெல்லம் சேர்த்து இத்துடன் 300 கிராம் பசும் வெண்ணையை சேர்த்து காய்ச்சி பதமாக்கிய பிறகு, லேகிய பதம் வந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல், காச நோய், எலும்பு தொடர்பான வியாதிகள், இருமல், கோழைக்கட்டு, கபம் கட்டுதல் போன்ற நோய்கள் பறந்து போய்விடும்.

தைலம், மாத்திரை ஆகியவைகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. 

தற்பொழுது பூண்டு தேநீர் பேதியை நிறுத்தும் மருந்து எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இரு பூண்டுகளை எடுத்து அதை தனித்தனியாக உதிர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு சுட வேண்டும். சுட்ட பூண்டுகளை தண்ணீரில் போட்டு 5 முதல் 7 நிமிடம் வரை கொதிக்க வையுங்கள். பிறகு இந்தத் தண்ணீரில் வழக்கம் போல் தேநீர் போட்டு குடிக்கலாம்.

ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தேநீரை ஆறவைத்து குடித்தால் பேதி நின்றுவிடும்.

No comments:

Post a Comment