Monday, May 28, 2012

சங்பரிவார் அமைப்பு

அன்றைய விடுதலைப்போரில் இன்றைய 'தேசப்பக்தர்கள் ஒரு பார்வை !!!

சங்பரிவார் அமைப்புகள்தான் இந்த நாட்டின் உண்மையான ' தேசபக்த' அமைப்புகள் என்ற பிரச்சாரத்தை பார்ப்பனீய சக்திகளும் , சங்கராச்சாரிகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .தேசப்பக்தி என்பதற்கு சங்பரிவார்களும் தேசியவாதிகளும் வைத்துள்ள அளவுகோலை வைத்து பார்த்தால் இதே சங்பரிவார்கள் தேசபக்தர்களாக ஒரு போதும் இருந்ததில்லை .இதுவே வரலாற்று உண்மை .

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடத்திய சுதந்திர போராட்டத்தில் பாலகங்கார திலகர் காலத்துக்கு பிறகுதான் , காந்தி தலைமை தாங்க வருகிறார் .பிரிவினையை எதிர்த்து திலகர் நடத்திய போராட்டம் மத அடிப்படையிலேயே நடந்தது என்பதுதான் வரலாறு .

விடுதலைப் பெறும் இந்தியா இந்துக்களின் தேசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் திலகர் தனது போராட்டங்களை நடத்தினார் . அதே கொள்கையை ஏற்றுக்கொண்ட பார்பனர்கள் திலகரை தீவிரமாக ஆதரித்தனர் .

மராட்டிய பார்ப்பனர் திலகர்தான் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்திற்கு முன்னோடி . டாக்டர் அம்பேத்கர் ,அவரது 'காந்தியும் , காங்கிரசும் தீண்டப்படாதொற்கு செய்தது என்ன ?. என்ற நூலில் திலகரின் வர்ணாசிரம ஆதரவை அம்பலப்படுத்தியுள்ளார் .

சோலாப்பூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திலகர் இவ்வாறு பேசினார்"செக்கு ஆட்டுகிறவன்,வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவன் ,சலவைத்தொழில் செய்கிறவன் இவனெல்லாம் எதற்காக சட்டசபைக்கு போக வேண்டும் ? சட்டத்திற்கு கீழ்படிந்து நடக்க வேண்டியதுதான் இந்த சாதிக்காரனுக்கு வேலையே தவிர சட்டத்தை உண்டாக்கும் இடத்திற்கு போகக் கூடாது ".

பெண்களை பள்ளிகூடத்திற்கே அனுப்பக்கூடாது என்று சொன்ன திலகர் நடத்திய 'சுந்திரப்போராட்டம் எப்படிப்பட்டது என்பதற்கு ஓர் உதாரத்தை குறிப்பிடலாம் 1897 ஆம் ஆண்டு பண்பாய் , சூரத் ,பூனா உட்பட இந்தியாவின் மேற்கு பகுதி முழுவதும் பயங்கரமான பிளேக் நோய் பரவி , ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் .

அதனால் பிரிட்டிஷ் கப்பல்கள் இந்தியாவிற்கு வருவது நிறுத்தப்பட்டது .அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் W .C .ராஹ்ட் என்ற ஐ சி எஸ் அதிகாரி தலைமையில் பிளேக் த்டுப்புக்கமிட்டி ஒன்றை அமைத்தது .பிளேக் நோய்க்கு காரணம் எலிகள்தான் என்று கண்டறியப்பட்டு , எலிகளை ஒழிக்கும் வேலைகள் நடந்தன .

பார்ப்பனர் திலகர் 

ஆனால் மதவெறியில் மூழ்கிப்போனவர்கள் , எலி 'விநாயக'கடவுளின் வாகனம் என்பதால் ,அதை கொல்லக்கூடாது என்பதோடு ,வியாதிக்கு உட்பட்டவர்களும் சிகிச்சை பெறக்கூடாது என்று தடுத்தனர் .

நோயாளிகளின் வீட்டுக்குள்,சிகிச்சைக்காக மருத்துவர்கள் குழு சென்ற போது, பல பார்பனர்கள் , " பிராமர்களின் வீட்டுக்குள் மிலேச்சர்கள் நுழையக்கூடாது " என்று எதிர்த்தனர் .

நோய் தடுப்புக்கமிட்டி தலைவராக இருந்த ராஹ்ட் , மற்றொரு அதிகாரி அயர்ஸ்ட் ஆகிய இருவரும் 1879 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி பூனாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் .

பூனாவைச்சார்ந்த பார்பனர்கள்தான் இதற்கு சதித்திட்டம் வகுத்தார்கள் என்று புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது . இந்த கொலையில் திலகருக்கும் தொடர்பிருந்தது உறுதி செய்யப்பட்டு , அவர் 18 மாதம் செர்ரைத்தண்டனை பெற்றார் .

1942 ஆம் ஆண்டு காங்கிரஸ் , 'வெள்ளையனே வெளியேறு ' இயக்கத்தை அறிவித்தபோது , கல்கத்தா மாகான அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி என்ற வங்காள பார்ப்பனர் .ஆர்.எஸ்.எஸ் .சின் அரசியளைப்பாக திகழ்ந்த ஜன சங்கம் கட்சி பெயர் மாற்றம் பெற்ற போது , அதன் மூத்த தலைவராக இருந்தவரும் இவர்தான் . இந்த முகர்ஜி காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்தவுடன் , ஒருஅமைச்சர் என்ற முறையில் பிரிட்டிஷ் அதிபராக இருந்த சர்.ஜான் ஹீர்பட்டுக்கு,அவர் கேட்காமலேயே கடிதம் எழுதினார் .

காங்கிரசின் சுதந்திரப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதவில்லை . " காங்கிரசின் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் , பல பகுதிகளுக்கும் பரவும் பேராபத்து இருக்கிறது . யுத்தம் நடக்கும் காலத்தில் , இப்படி மக்கள் உணர்வுகளை தூண்டிவிடுவது உள்நாட்டு பாதுகாப்பை சீர் குலைத்துவிடும். எனவே காங்கிரசார் போராட்டத்தை அடக்கியாக வேண்டும்" என்று கடிதம் எழுதியவர்தான் இந்த முகர்ஜி .


ஆதாரம் : இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் (17.8.1992 )

அதே 1942 ஆம் ஆண்டு ம.பி.மாநிலத்தில் பட்டேசுவர் எனும் ஊரில் , முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது சகோதரர் பிரேம் பிகார்லால் பாஜ்பாய் மற்றும் பலர் கலந்து கொண்டு , கைது செய்யப்பட்டனர் .

அப்போது வாஜ்பாயும் அவரது சகோதரரும் , கலவரத்தில் ஈடுப்பட்டு தலைமறைவாக இருக்கும் நபர்களை பற்றிய தகவல்களையெல்லாம் அதிகாரிகளிடம் காட்டி கொடுத்து , அவர்கள் மட்டும் விடுதலை வாங்கி கொண்டனர்.அப்போது வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக இருந்த கிரிஜா சங்கர் பாஜ்பாய் என்ற பார்ப்பனர் மூலம் இந்த பேரம் நடந்தது . இந்த உண்மையை வாஜ்பாய் சகோதரர் மத்திய பிரதேச அரசாங்கமே நடத்தும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் ஒப்புக்கொண்டு எழுதி இருக்கிறார் .(12.5.1973) (ஆதாரம் )

பிரண்ட்லைன் ஆங்கில பத்திரிகை, வாஜ்பாய் பிரதமர் ஆனவுடன் , இந்த கட்டுரையை வெளியிட , வாஜ்பாய் வழக்குத் தொடரபோவதாக கூற , பிறகு அந்த பத்திரிகை செய்தியாளர்களே வாஜ்பாயை சந்தித்து , ஆதாரங்களை காட்டியபோது , வாஜ்பாய் மௌனமாகிவிட்டார் .

பிளிட்ஸ் வார ஏடும் இத்தகவலை அம்பலப்படுத்தியது .(ஆதாரம் )

1942இல் காங்கிரசார் ' வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நடத்தியபோது , ஆர் எஸ் எஸ் காரர்கள் பலர் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார்கள் . சிலர் பிரிடிஷ் ராணுவத்திற்கு தேவையான இயந்திரங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை அரசுடன் செய்துக்கொண்டனர் .

பிரிட்டிஷார் உத்தரவை ஏற்று ஆர் எஸ் எஸ் சில் செயல்பட்டு வந்த ராணுவ பிரிவை ஆர் எஸ் எஸ் கலைத்தது . தங்களது சீருடைகளை மாற்றிக்கொண்டனர் . இந்த நடவடிக்கைகளுக்காக பம்பாய் ஆளுநரிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ்களை ஆர் எஸ் எஸ் காரர்கள் பெற்றனர் .

சுதந்திரம் வந்த நாளான 1947 ஆகஸ்டு பதினைந்தில் பூனாவில் ஆர் எஸ் எஸ் காரர்கள் கூடி தங்களின் காவிக்கொடியை ஏற்றி இந்துக்களின் நாடாக மாற்ற சபதமேற்றனர் .அந்த கூட்டத்தில் பிறகு காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவும் இருந்தான் .

" பிரிடிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் காங்கிரசாரிடம் ஆட்சியை தந்தாள் இரண்டு மாதங்கள் கூட இவர்களால் சமாளிக்க முடியாது " என்றுதான் ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கர் தனது ஊழியர்களிடையே பேசி வந்தார் .

(ஆதாரம் ): டி.ஆர் . கோபால் எழுதிய ஆர் எஸ் எஸ் பற்றிய ஆய்வு நூல் 

தங்களுடைய விசுவாசத்தை பாராட்டி பிரிடிஷார் ஆர் எஸ் எஸ் இடம் தான் நாட்டை ஒப்படைத்துவிட்டு வெளிஎரப்போகிரார்கள் என்று ஆர் எஸ் எஸ் தலைவர்களே எதிர்பார்த்து பிரச்சாரம் செய்தனர் .

(ஆதாரம் ) : ஹெமேந்திரநாத் எழுதிய THE END OF DREAM, AN INSIDE VIEW OF THE RSS TODAY 

சாவர்க்கார்

காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட சாவர்க்கரை , மிகச்சிறந்த விடுதலைப்போராட்ட வீரர் என்று அத்வானி நாடாளுமன்றத்தில் புகழ்ந்தார் .

அவரது பெயரை வமான நிலையம் ஒன்றுக்கு வாஜ்பாய் ஆட்சியின் போது சூட்டப்பட்டது ,அவரை பற்றிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு அரசு ரூ 2 கோடி நிதி உதவி செய்திருப்பதாக ஆர் எஸ் எஸ் இன் அதிகாரப்பூர்வமான தமிழ் ஏடான விஜயபாரதம் செய்தி வெளியிட்டிருக்கிறது .

இவர் துவக்கிய ஒரு தீவிரவாத அமைப்பு லண்டனில் இந்திய அலுவலகத்தில் பண புரிந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொலை செய்தது . அதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாவர்கர் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டு அந்தமான் தீவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டார் .

சிறைச்சாலையிலிருந்து செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து , மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததொடு தன்னை விடுதலை செய்தால் , பிரிட்டிஷ் ஆட்சி அமால் படுத்த விரும்பும் மாண்டேகு சேம்ஸ்போர்ட் சீர் திருத்தத்திற்கு முழு ஆதரவு தருவதாக உறுதி தந்தார் .இந்த சீர் திருத்தத்தை அப்பொழுது காங்கிரஸ் எதிர்த்து கொண்டிருந்தது .மன்னிப்பு கடிதத்தை பிரிடிஷ ஆட்சி ஏற்றுக்கொண்டு இவரை விடுதலை செய்தது .
(ஆதாரம் ) : பிரண்ட்லைன் 1995 ஏப்ரல்

தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு , பார்பன மேலாண்மைக்கு ஆதரவு என்ற கொள்கையை ஏற்க மறுத்த காரணத்தால் ஆர் எஸ் எஸ் ஐ சார்ந்த கோட்சே எனும் பார்ப்பனரால் 1948 ஜனவரி 30 காந்தியை சுட்டுக்கொண்டார் .

இப்படி ஏராளமான சான்றுகளை அடுக்கிகொண்டே போகலாம் . இப்பொழுது இவர்கள்தான் தங்களை தேசப்பக்தர்களாக காட்டிகொண்டிருக்கிரார்கள் . வரலாறுகளை மறைப்பதும் திரிப்பதும் சங்கபரிவார்களின் கலாச்சாரமாகிவிட்டது .

நன்றி 
சமுதாய அரங்கம்

No comments:

Post a Comment