Monday, May 21, 2012

அணு உலை அபாயம்

அணுவின் கோர முகம் என்னவென்று தெரிவதற்கு முன்னரே நாம் அணு உலையை ஆதரிக்க தயாராகிவிட்டோம், ஒரு உதாரணம் சொல்கிறேன் அதை வைத்து அணுவின் கோர முகத்தினை தெரிந்துகொள்ளுங்கள், ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய போது அந்த இடத்தின் தரை வெப்பம் எவ்வளவு தெரியுமா 9000 டிகிரி பேரன்ஹீட், அந்த வெடிப்பிலிருந்து கிளம்பிய காற்றின் வேகம் மணிக்கு 1500 மைல் வேகம். சாதாரனமாக நம் நாட்டில் வெயில் காலங்களில் அதிகபட்சமாக 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் உயரும், அதையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கோடைவாசத்தலங்களுக்கு சென்று நம்மை குளிர்வித்து கொள்கிறோம், வெறும் 115 டிகிரிக்கே இந்த நிலைமை என்றால் 9000 டிகிரிக்கு சாம்பல் கூட கிடைக்காது. நான் சொல்லியது ஒரு குண்டின் ஆற்றல் மட்டுமே, அணுஉலையானது அது போல் பல மடங்கு ஆற்றல் கொண்டது. இப்படிபட்ட பேராபத்தை ஆமோதிப்பதற்கு முன் நம்மிடையே பாதுகாப்பான மாற்று சக்தி உள்ளதா என்று பார்க்கவேண்டும், சூரிய ஒளியிலிருந்து தயாரிக்ககூடிய மின்சாரமானது 100 சதவீத பாதுகாப்புடையது, அது இருக்கையில் நம்மை மட்டுமல்லாது நம் வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் அணுமின்சாரம் தேவைதானா?
ஜப்பானில் புகுஷூமா அணு உலை வெடித்ததினால் ஏற்பட்ட கதிர்வீச்சு ஒருவருடம் ஆகியும் அளவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை, மேலும் அந்த கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்த ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளிடமே இன்னும் வழிமுறை கண்டறியப்படவில்லை, அப்படியே வழிமுறை கண்டறியப்பட்டாளும் கதிர்வீச்சை கட்டுபடுத்த இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம். மேலும் அங்கே தற்சமயம் ஏற்பட்டுள்ள கதிர்வீச்சின் அளவு மனிதனை கொல்லகூடிய அளவைவிட 6 மடங்கு அதிகமாக உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. எனவே மனிதன் அங்கு செல்ல வாய்ப்பில்லை என்பதால் ஜப்பான் நவீன ரோபோட்களை தயார் செய்து அதன் மூலம் செயழிழப்பு செய்ய முடிவு செய்துள்ளது. ஜப்பானுக்கே இந்த கதி என்றால் நம்ம நாட்டில் இன்னும் ரோபோட் தயாரிப்புகள் வெறும் மாதரி வடிவத்தில் தான் உள்ளது.

கூடுதல் தகவல்:- பிரான்ஸ் அரசு 2007ம் ஆண்டு அணு உலை ஒன்றினை செயழிழக்க முடிவு செய்தது அதன்படி செயழிழப்பு செய்யும்போது தான் ஒரு உண்மை புரிந்தது அதாவது அந்த அணு உலையை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கடலுக்கு அடியில் பத்திரமாக பாதுக்காக்கப்பட வேண்டும், அவ்வாறு அவை பாதுகாக்கபட்டாலும் அதிலிருந்து கதிர்வீச்சு வெளியேறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும்மில்லை. இதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் 2014 உடன் மூடிவிட முடிவு செய்துவிட்டது.

இதற்கு மேலும் நாம் அணு உலையை ஆதரித்தால் கொள்ளிக்கட்டையை எடுத்து நாமே நம் தலையை சொரிந்து கொள்வதற்கு சமமாகும்

No comments:

Post a Comment